May 29

மேலதிகமாக இரு நாட்களை மீட்பு கப்பலில் கழித்த குடியேற்றவாசிகள்

ஐரோப்பாவுக்கு சட்டவிரோத படகுப் பயணத்தை மேற்கொண்ட வேளை  மீட்கப்பட்ட 1,500  க்கு மேற்பட்ட குடியேற்றவாசிகள் 600 பேர் பயணிக்கக் கூடிய  கப்பலில்  மேலதிகமாக இரு நாட்களைக் கழிக்க நேர்ந்த  நிலையில்  ஞாயிற்றுக்கிழமை இத்தாலிக்கு  அழைத்து வரப்பட்டனர்.

 இத்தாலிய சிசிலி பிராந்தியத்தில் இடம்பெற்ற ஜி7  உச்சிமாநாட்டின் காரணமாகவே  குடியேற்றவாசிகள் மீட்புக் கப்பலில் இரு நாட்களைக் கழிக்க நேர்ந்துள்ளது.

 அந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட ஜி7  நாடுகளின் தலைவர்களுக்கான கடும்  பாதுகாப்பு நடவடிக்கையின் நிமித்தம்  அந்தக் குடியேற்றவாசிகளை அழைத்து வந்த கப்பல் துறைமுகப் பகுதிக்குள் பிரவேசிக்க அதிகாரிகள் அனுமதியளிக்க மறுத்திருந்தனர்.