May 29

அமெரிக்க மாநிலத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 8 பேர் பலி

 அமெரிக்க மிஸிஸிப்பி மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 8  பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

லிங்கன்  நகரிலுள்ள வெவ்வேறு  பகுதிகளில் இரவு வேளையில் இந்த சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டை நடத்திய வில்லி கொரி கோட்போல்ட் (35  வயது)  என்ற நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது மனைவிமனைவியின் தாய் மற்றும் மாற்றான் தந்தையுடன்  தனது பிள்ளைகளை அழைத்துச் செல்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற போது  எவரோ   பிராந்திய பிரதி  காவல் அதிகாரிக்கு தகவல் அளித்து அவரை  அங்கு வரவழைத்ததாகவும் அதனால் சினமடைந்து தான் அந்த காவல் அதிகாரியை சுட்டுக் கொல்ல  நேர்ந்ததாக வில்லி கொரி கோட்போல்ட்  தெரிவித்துள்ளார்.

தான் தற்போது தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.  எனினும் அவர் ஏனையவர்களை சுட்டுக் கொன்றார் என்பது தொடர்பில் விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை.. அவர் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவராக இருக்கலாம் என நம்பப்படுகிறது.