May 29

அமெரிக்கா, பிரித்தானியாவில் முழுமையாக தங்கியிருக்க முடியாது; அஞ்ஜெலா

 அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவாவதற்கு காரணமாக அமைந்த தேர்தல் மற்றும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிவதற்கு  ஆதரவாக இடம்பெற்ற பிறிக்ஸிட் வாக்கெடுப்பு என்பனவற்றுக்குப் பின்னர்  ஐரோப்பாவானது  இனிமேலும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் முழுமையாக தங்கியிருக்க  முடியாது  என ஜேர்மனிய அதிபர் அஞ்ஜெலா மெர்கெல் தெரிவித்தார்.

 அந்த இரு நாடுகளுடனும் ரஷ்யாவுடனும் தான் நட்புறவை  பேண விரும்புவதாக தெரிவித்த அவர்ஆனால்  ஐரோப்பா   தற்போது தனது சொந்த தலைவிதிக்காகத் தானே போராட வேண்டியுள்ளதாக  கூறினார்.

 அஞ்ஜெலா மெர்கெல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்காக  பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மற்றவர்களிடம் முழுமையாக தங்கியிருக்கக் கூடிய  காலம் கடந்து விட்டது. அதனை நான் கடந்த சில தினங்களாக அனுபவத்தில் உணர்ந்தேன்"  என அவர் முனிச் நகரில்  இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

 ஜேர்மனிக்கும்  பிரான்ஸின் புதிய ஜனாதிபதியான இம்மானுவேல் மக்ரோனுக்குமிடையிலான உறவுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியுள்ளதாக தெரிவித்த அவர், ஐரோப்பியர்களான நாம் எமது தலைவிதியை எமது கரங்களில் எடுத்துக் கொள்ள வேண்டும்"  என வலியுறுத்தினார்.