Jul 03

பட்ஜெட் விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஆன்6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 5.6 இன்ச் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, இரண்டிலும் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருப்பதோடு, கைரேகை சென்சார் மற்றும் 3000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.- 5.6 இன்ச் 1480x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED 18.5:9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர்

- மாலி T830 GPU

- 4 ஜிபி ரேம்

- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ

- டூயல் சிம் ஸ்லாட்

- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

- 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

- கைரேகை சென்சார்

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

- 3000 எம்ஏஹெச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஆன்6 ஸ்மார்ட்போன் புளு மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் மற்றும் சாம்சங் ஷாப் ஆன்லைன் தளங்களில் ஜூலை 5-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலை ரூ.14,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.