May 29

விரைவில் முதல் பார்வை; மீம்ஸ் போதும் ப்ரோ: நெட்டிசன்களிடம் கெஞ்சிய விக்னேஷ் சிவன்

சிங்கம் 3'திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தின் முதல் பார்வை விரைவில் வெளியிடப்படும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி வெகு நாட்கள் ஆன நிலையில், திரைப்படம் தகவலும் வெளியிடாததால் சூர்யா ரசிகர்கள் கடும் கோபத்திற்குள்ளாகினர்.

பலமுறை திரைப்படம் குறித்து இயக்குனரிடம் கேட்டும் எவ்வித தகவலும் வெளியாகாததால், சமூக வலைதளத்தில் மீம்ஸ் போட்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை கலாய்த்து சூர்யா ரசிகர்கள் வறுத்தெடுத்தனர்.இந்நிலையில், சூர்யாவின் புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், ஒரு சில நாட்களில் 'தானா சேர்ந்த கூட்டம்' முதல் பார்வை வெளியாகும் என தெரிவித்தார்.

மேலும், மீம்ஸ் போட்டது போதும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.சூர்யா, கீர்த்தி சுரேஷ், தம்பி ராமையா, செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யாகிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு விக்னேஷ் சிவனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.