Jul 02

பிரதமருக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது

பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து ஒன்ராறியோவை சேர்ந்த முதியவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர், கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், றொய்ஸ் வானெவிரி என்ற 60 வயதுடைய Leamington பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் சில தினங்களில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ குறித்த பகுதியில் இடம்பெறும் நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவதற்காக வருகை தரவிருந்த நிலையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் கூறியுள்ளனர்.