May 29

ரொறொன்ரோ பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தின் நினைவாக சிலை திறப்பு

ரொறொன்ரோ–பிரம்ரன் உயர்பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் 42வது ஆண்டு நிறைவு அனுஷ்டிக்கப்பட்டுள்ள நிலையில், நினைவு சின்னம் ஒன்றும் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இத் திறப்பு விழாவில் பிரம்ரன் சென்ரெனியல் இரண்டாம் தர பாடசாலையின் தற்போதைய மற்றும் பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இந்த நினைவுச் சின்னமானது குறித்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் துயர் துடைக்க உதவுமென சிலையை வடிவமைத்த மேரி எலென் வரோ தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சம்பவம் இடம்பெற்ற காலகட்டத்தில் அங்கு பாடசாலை மாணவராக இருந்த பாம் ஹான்ட் என்பவர் கருத்து தெரிவிக்கையில், இந்த துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் உடல் ரீதியாக தான் காயப்படவில்லை என்றும் இத்துயர சம்பவத்தால் உணர்வுபூர்வமாக பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

42 வருடங்களிற்கு முன்னர் அதாவது 1975ஆம் ஆண்டு மே மாதம், 16-வயதுடைய மைக்கேல் சிலோபோடியன் என்ற இளைஞன் சகமாணவர் ஒருவரையும் ஆசிரியர் ஒருவரையும் சுட்டு கொலை செய்தார். அவர்களின் நினைவாகவே குறித்த சிலை அமைக்கப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.