May 29

நிலச்சரிவுகள் காரணமாக SCARBOROUGH BLUFFS பூங்கா பார்வையாளர்களுக்கு எச்சரிக்கை

கனடாவின் Scarborough Bluffs  பூங்காவின் மேல் மற்றும் அடித்தளங்களை விட்டு விலகி இருக்குமாறு பார்வையாளர்களுக்கு   ரொறொன்ரோ நகரம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆணையம் ஆகியன எச்சரிக்கை விடுத்துள்ளன.

இவ் வருடம் இடம்பெற்ற அதிகளவான நிலச்சரிவுகளே இவ் எச்சரிக்கைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கிட்டத்தட்ட 15 நிலச்சரிவுகள் இடம்பெற்றுள்ளதாக பிராந்திய பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

பலத்த மழை மற்றும் லேக் ஒன்ராறியோவின் நீர்மட்ட அதிகரிப்பு காரணமாக குன்றுகள் வெடித்து விழுவதோடு,  தண்ணீருக்கு அருகாமையில் உள்ள பூங்காவின் வழிகளும் அரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இப்பகுதியின் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சி குறித்து பல ஆய்வுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அண்மைக்கால மழையினால் கடற்கரை அரிப்பு குறித்து பூங்கா பார்வையாளர்களுக்கு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கணிக்க முடியாத நீர் மட்டம் காணப்படுவதால் இக்கால கட்டத்தில் நீர்மட்டத்தை விட்டு விலகி இருப்பது பாதுகாப்பானது என கூறப்படுவதோடு, காற்று மற்றும் அலைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.