Mar 13

இறுதி தீர்மானத்தையே அரசாங்கமே எடுக்கும்

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டும் என சர்வதேசம் எவ்வாறான தீர்மானங்களை முன்வைத்தாலும்   இலங்கை அரசாங்கமே இறுதி தீர்மானத்தை எடுக்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இராணுவ குற்றங்கள் என்ற பெயரில் எந்த தீர்மானத்தை திணிக்க முயற்சித்தாலும் அதை அரசாங்கம் நிராகரிக்கும் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.