May 29

உணவு பரிசோதனை மீள அழைப்பு பட்டியலில் மா சார்ந்த உணவு பொருட்கள் சேர்ப்பு

கனேடிய கனடிய உணவு ஆய்வு நிறுவனம் அதன் மீள அழைப்பு பட்டியலில் மேலதிகமான மா வகைகளையும் மா சார்ந்த பொருட்களையும் சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இம் மா பொருட்களில் ஈ கோலி தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையிலேயே மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இவை ஆபத்து விளைவிக்க கூடிய பக்டீரியா-E. coli O121-வினால் மாசுபடுத்தப்பட்டிருக்கலாம் என கனடிய உணவு ஆய்வு நிறுவனம் (Canadian Food Inspection Agency – CFIA) வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ஆட்டா மா, ரவை மற்றும் கோதுமை மா போன்ற மாவகைகளினாலான பிசைந்த மா கலவையை சாப்பிடுவது ஆபத்தானதென தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட மாக்களில் பக்டீரியா கலந்திருந்தாலும் பழுதடைந்த மணம் தெரியாதென தெரிவித்துள்ள கனடிய உணவு ஆய்வு நிறுவனம், இதனால் உடல் நலம் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளதோடு, வாந்தி, வயிற்று பிடிப்பு மற்றும் இரத்தம் கலந்த நீர்த்தன்மையான வயிற்று போக்கு போன்ற அறிகுறிகள் காணப்படலாம் என எச்சரித்துள்ளது.