Jul 02

பூம்புகார் சண்முகா முன்பள்ளி மழலைகள் விளையாட்டு விழா - 2018

யாழ். அரியாலை பூம்புகார் சண்முகா முன்பள்ளி மழலைகளின் விளையாட்டு விழா – 2018 29.06.2018வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் பூம்புகார் பாடசாலை மைதானத்தில் பூம்புகார் சனசமூக நிலையத்தலைவர் திரு. சி.அரவிந்தன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. என். விந்தன் கனகரட்ணம்அவர்களும்  சிறப்பு விருந்தினர்களாக பிரசித்த நொத்தாரிசும் சட்டத்தரணியுமான திரு. ஜொனி மதுரநாயகம் மற்றும்தாங்கும் கரங்களின் காப்பாளர் அருட்கலாநிதி திரு. ஸ்ரனி அன்ரனி ஆகியோரும்  கௌரவ விருந்தினர்களாக யா பூம்புகார் அ.த.க. பாடசாலை பிரதி அதிபர் திரு. து.பிரபாகரன்   90 கிராம உத்தியோகத்தர் திரு. மு. மைந்தன் பிரதேச இணைப்பாளர் திரு. எ. செந்தூரன்  குடும்பநல உத்தியோகத்தர் திருமதி P. கார்த்திகா மற்றும்மருத்துவக்கல்லூரி விரிவுரையாளர் திருமதி. சர்மிலா அருண்பாபு ஆகியோரும்; கலந்து சிறப்பித்திருந்தனர்.

மழலைகளுக்கான் போட்டிகளான 100  75 50 மீற்றர் ஓட்டம்ரூபவ் பழம் பொறுக்குதல்  கொடி நாட்டல்  நீர்நிரப்பல்  பூக்கோத்தல்  பந்துப் பரிமாற்றம ;என்பனவும்  பழைய மாணவர்களுக்கான பலூன் உடைத்தல் மற்றும்பெற்றோர்  நடுவர் நிகழ்ச்சி என நடைபெற்ற பல போட்டிகளில் சிறுவர் முதல் இளையோர் மற்றும் பெரியோர்வரை அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் பதிவுகளைப் படங்களில் காணலாம்.