Jun 30

பிராம்டன் பகுதியில் வாகன விபத்து – ஒருவர் உயிரிழப்பு

பிராம்டன் பகுதியில் பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தானது (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

3 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 20 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். அத்துடன் காயமடைந்தவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த விபத்து தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் பீல் பிராந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.