Jun 30

பிரான்ஸில் வீட்டை விட்டு வெளியேறும் மக்கள்!

நேற்று , நாடு முழுவதும் கடும் வெப்பம் நிலவியது. இவ்வார கடைசியில் வெப்பம் மேலும் அதிகரிக்க உள்ளது. 

நேற்று, பரிஸ் உட்பட இல்-து-பிரான்சுக்குள் 32°c வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இதுதவிர நாட்டின் பல பகுதிகளில் இதே அளவு வெப்பம் நிலவியது.

சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வெப்பம் 37°c வரை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெப்பமானது இவ்வருடத்தில் பதிவாகும் முதல் அதிகூடிய வெப்பநிலையாகும்.

அதேவேளை, இன்று வெள்ளிக்கிழமையும் இந்த வெப்பம் நீடித்து, 34°c வரை செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிஸில் கோடை வெயிலை சமாளிப்பதற்குரிய பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

24 மணிநேரமும் திறந்திருக்கும் பூங்காக்களும், இசை நிகழ்வுகளும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.