100 மீட்டர் தூரத்தை 11.29 வினாடிகளில் கடந்து ஒடிசா வீராங்கனை சாதனை
தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கவுகாத்தி நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தின் அரையிறுதியில் ஒடிசா வீராங்கனை டுட்டீ சந்த் 11.29 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன்பு அவர் 11.30 வினாடிகளில் இலக்கை கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. சொந்த சாதனையை இப்போது முறியடித்து இருக்கிறார்.
இதன்மூலம் வருகிற ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற உள்ள ஆசிய தடகள போட்டிகளுக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். அதற்கு தகுதிபெற 100 மீட்டர் தூரத்தை 11.67 வினாடிகளில் கடக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.