Jun 29

ஒன்ராறியோவின் புதிய அரசாங்கம் பதவி ஏற்கிறது

ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சித் தலைவர் டக் ஃபோர்ட் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஒன்ராறியோவின் புதிய முதல்வராக பதவியேற்கின்றார்.

Queen’s Parkஇல் நடைபெறவுள்ள இந்தப் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு பொதுமக்கள் அனைவருக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அதேவேளை ஒன்ராறியோ தேர்தலில் வெற்றி பெற்று மாநில அரசாங்கத்தை ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை அமைக்க உள்ளமை பலரின் எதிர்பார்ப்புக்களை அதிகரித்துள்ளது.

இந்த மாநில அரசாங்கத்தின் அமைச்சரவையின் எண்ணிக்கை எத்தனை, யார் அமைச்சர் பதவிகளைப் பெறுவார்கள் என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவுகின்ற போதிலும், அவை தொடர்பான தகவல்கள் எதனையும் அந்த கட்சித் தலைமை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.