Jun 29

கனடா வானிலை குறித்து முக்கிய அறிவிப்பு

கனடாவில் வரும் வார இறுதி நாட்களில் வெப்பமானது மிக அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சுற்றுசூழல் கனடா வெளியிட்டுள்ள அறிக்கையில், GTA-வில் உள்ள வெப்பநிலையானது வார இறுதியில் தீவிர நிலைகளாக அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.வெள்ளிக்கிழமையிலிருந்து திங்கள் வரை வெப்பநிலை பகலில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இரவில் வெப்பம் சிறிய அளவில் குறைந்து 20-களில் வந்து நிற்கலாம் எனவும், இது கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு மிகவும் குறிப்பிடத்தக்க வெப்ப நிகழ்வாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சமயத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள், வெளியில் அலைந்து வேலை செய்பவர்கள் ஆகியோர் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.