Jun 28

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு சக்தி கலாசார அபிவிருத்தி மன்றத்தின் 16 ஆவது ஆண்டு நிறைவு விழா

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு சக்தி கலாசார அபிவிருத்தி மன்றத்தின் 16ஆவது ஆண்டு நிறைவு விழா27.06.2018 புதன்;கிழமை அன்று நாயன்மார் குருபூசை மடத்தில் காலை 9.00 மணிக்கு சக்தி கலாசாரஅபிவிருத்தி மன்றத் தலைவி செல்வி சனுஜா இராசேந்திரம்; தலைமையில் சிறப்புற நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் கௌரவ சி.வி.கே.சிவஞானம்  யாழ் மாவட்டவடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் மற்றும் யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்பேராசிரியர் என்.சண்முகலிங்கன்; ஆகியோரும்  சிறப்பு விருந்தினர்களாக இந்துசமய கலாசாரஅபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ர. நகுலா நல்லூர் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதிவிஜிதா செல்வக்குமார்  அரசகேசரி பிள்ளையார் ஆலய குருக்கள் சிவூ சதா. மகேஸ்வர குருக்கள்  ஓய்வுபெற்றயாழ்ப்பாணம் மின் அத்தியட்சர் திரு. ந.குகதாசன் மற்றும் ஓய்வுபெற்ற யாழ் நூலக பிரதம நூலகர்தனபாலசிங்கம் ஆகியோரும்  கௌரவ விருந்தினர்களாக துஃ91 கிராம அலுவலர் திரு.கே.தங்கத்துரை  திரு. பு.தஜிதரன்  புள்ளி விபரவியல் திணைக்களத்தைச் சேர்ந்த திரு. ம. வித்தியானந்தநேசன்  யாழ். பல்கலைக்கழகஒழுக்காற்று அதிகாரி திரு. நி. விஜேந்திரா ஆசிரியர் திரு. க. செந்தில்நேசன்  ஆசிரியர்திருமதி ஸ்ரீ ஜனதா மற்றும் சுடர் நிலா புத்தகசாலை திரு. த.தனதீசன்; ஆகியோரும் கலந்துசிறப்பித்திருந்தனர்.

இந் நிகழ்வில் சக்தி கலாசார அபிவிருத்தி மன்ற மாணவர்கள்  சரஸ்வதி அறநெறி பாடசாலை மாணவர்கள்மற்றும் சாமுவேல் கல்வி அபிவிருத்தி மன்ற மாணவர்களின் ஆகியோரின் கலை நிகழ்வுகளும் உழைப்பாளர்களை இழந்தும் பிள்ளைகளை அடைவ மட்டத்திற்கு உயர்த்தியவர்களுக்கான வெற்றித் திலகம் விருது திருமதிகனகலிங்கம் ஞானேஸ்வரி மற்றும் திருமதி நாகலிங்கம் புஸ்பமணி ஆகியோருக்கும்  நல்ல பிள்ளைகளைஉருவாக்க உழைத்தவர்களுக்கான “கல்வி திலகம்” விருது திருமதி டொறத்தி மகிழினி வித்தியானந்தநேசன்  திருமதிவிஜயா குமரதாசன் (அறநெறிப்பாடசாலை) மற்றும் திருமதி மகேந்திரம் லோகேஸ்வரி ஆகியோருக்கும்வழங்கி கைளரவிக்கப்ப்டதுடன்  கலசக்தி கலாசார அபிவிருத்தி மன்ற மாணவர்களில் நல்ல பிள்ளைகள் கௌரவம்பெறுபவர்களுக்கான பரிசளிப்பும் நடைபெற்றது.