Jun 28

கனடாவிற்கு வந்த அகதிகளில் அதிகமானவர்கள் சிறுவர்கள்

கனடாவிற்கு தஞ்சம் கோரி வந்து ரொறன்ரோ அகதிகள் முகாமில் இருப்பவர்களில் அதிகமானவர்கள் குழந்தைகளும், சிறுவர்களும் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் மூலம், இதுவரை வந்தவர்களில் 728 பேர் 8 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும், 518 பேர் 8-15 வயதிற்கு உற்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த கோடை காலத்தில் நாட்டுக்குள் வந்த அகதிகளில் நகரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 332 தங்கியுள்ளனர்.

இவ்வாறு கியூபெக்கில் இருந்து நாட்டுக்குள் குடியேறியவர்களில் அதிகமானவர்கள் ரொறன்ரோவில் மட்டும் தங்குவதால் தொடர்ந்து அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அகதிகளின் விடயம் தொடர்பில் ஒட்டாவா மாநிலம் அரசாங்கம் ஒன்டாரியோவுடன் இனைந்து செயற்பட வேண்டும் என குடிவரவு அமைச்சர் அகமட் ஹுசைன் கேட்டுக் கொண்டுள்ளார்.