Jun 27

கனடா பல்கலைகழத்தில் தமிழ் இருக்கை: உலக தமிழர்களுக்கு பெருமையான தருணம்

கனடாவின் டொரண்டோ பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படவுள்ளது.டொரண்டோ பல்கலைகழகத்தின் முதல்வரான ப்ரூஸ் கிட், ஸ்கார்பரோ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியின் போதே இதனை அறிவித்தார்.

மேலும் அவர், பல மொழிகளுக்கு மொழியியல் கட்டமைப்பை உருவாக்க வழிகாட்டும் தமிழ் மொழி இலக்கியம் மற்றும் பராம்பரியத்தில் உயர்ந்தது என புகழாரம் சூட்டினார்.

இலங்கை தமிழர்களுக்கு இது மிகப்பெருமை வாய்ந்த மைல்கல் என இதுகுறித்து கருத்து தெரிவித்த கனடா தமிழ் காங்கிரஸின் துணைத்தலைவரும், தமிழ் இருக்கையின் துணைத் தலைவருமான சிவன் இளங்கோ கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் இருக்கை அமைய ஐந்து மில்லியன் டொலர் தேவைப்படும் பட்சத்தில் தொடக்க விழாவிலேயே 6 லட்சம் டொலருக்கு மேலாக நிதி திரண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.