Jun 27

பிரான்ஸில் இனி இறைச்சி, மீன் விற்பனை தடை!

பிரான்ஸில் இறைச்சி வெட்டுபவர்கள், மீன் விற்பனை கடைகள் வைத்திருப்பவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் இடம்பெற்று வருவதைத் தொடர்ந்து, அவர்கள் உள்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.  

அவர்கள் மீது தாக்குதல்கள், சைவ உணவு மாத்திரம் உண்பவர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. Hauts-de-France உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள மாட்டு இறைச்சி கடை மற்றும் பன்றி இறைச்சி கடைகள் மீது அடிக்கடி தாக்குதல்கள் மேற்கொள்கின்றனர். இதுவரை 7 கடைகள் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, இரத்தம் மாதிரியான போலியான திரவத்தை கொண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது மீன் விற்பனை செய்பவர்கள் மீதும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. Occitanie பகுதியிலும் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் தங்களை காப்பாற்றும் படி அவர்கள் அமைச்சர் Gérard Collombக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். பிரான்ஸ் முழுவதும் 18,000 இறைச்சி வெட்டுபவர்கள் உள்ளனர். தங்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்படுவது எந்த முறையிலும் சரியில்லை’ என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிஸில், சைவ உணவும் உண்ணுபவர்களால் இறைச்சி வெட்டுபவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.