May 29

மீண்டும் நயன்தாராவுடன் நடிக்கிறார் விஜய் சேதுபதி…!

பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.

நயன்தாராவும், விஜய் சேதுபதியும் ‘நானும் ரௌடிதான்’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலைக் குவித்தது.

இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்திலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

‘இமைக்கா நொடிகள்’ படத்தின் கதாநாயகனாக அதர்வா நடித்து வருகிறார். கதாநாயகியாக ராக்ஷி கண்ணா நடிக்கிறார்.

‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாரா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.

இப்படத்தில்தான் விஜய் சேதுபதி சுமார் 15 நிமிட காட்சிகள் வரை நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் பாலிவுட்டில் பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப்பும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாயின.

இதை ரசிகர்கள் பெரியளவில் வரவேற்றனர்.