Mar 13

புதிய அரசியலமைப்பு குறித்து மகிந்த விடுக்கும் எச்சரிக்கை

சமகால அரசியல் நிலைமை மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பில்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதாவது,  

யுத்தத்தை வெற்றி கொண்டதற்காக இராணுவத்தை தண்டித்தல்,    மத்திய அரசாங்கம் மற்றும்   ஒற்றையாட்சி  இல்லாமல்   போகும் அளவிற்கு அதிகாரத்தை பகிர்தல்,  பிரிவினைவாதிகளுக்கு நன்மையளிக்கும் வகையில் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றது.

ஆகவே புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால்  இந்த நாடு சமஷ்டி முறைமையிலான  9 மாநிலங்களாக பிரிக்கப்பட்டுவிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.