Jun 25

சீன- கனடா சுற்றுலா பயணிகளுக்காக புதிய விசா மையங்கள் திறப்பு

சீனாவிற்கான புதிய விசா விண்ணப்ப மையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் காலங்களில் அதிகளவிலான சீனா சுற்றுலாப் பயணிகள் வடக்கு அமெரிக்காவிற்கு வருவார்கள் என சிறு வணிக மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் Bardish Chagger தெரிவித்துள்ளார்.

சீன-கனடாவிற்கு இடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன் காரணமாக கனடாவுக்குல் சீன நாட்டவர்கள் அதிகம் வருவதால் நாங்கள் 7 புதிய விசா விண்ணப்ப மையங்களை திறந்துவிட்டோம் என அமைச்சர் கூறினார்.

மேலும் ஏர் கனடா கனடாவின் 5 புதிய நேரடி விமான சேவைகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாவும் தெரிவித்த அவர், இதன் காரணமாக இரு நாடுகளிலும் புதிய முதலீடுகள் மற்றும் வர்த்தக ரீதியான முன்னெடுப்புக்கள் அதிகமாகும் எனவும் கூறினார்.

அத்துடன், சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கான 2 ஆவது மிகப்பெரிய சந்தையாக சீனா உள்ளது. இந்நிலையில் குறித்த நடவடிக்கையானது இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் என சீனாவிற்கான கனேடிய தூதுவர் ஜோன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

மேலும் சுற்றுலா பயணிகள் இரு நாடுகளுக்கும் சென்றுவருவாதல் இரு நாட்டுக்கான உறவுப்பாலம் விருத்தியடையும் எனவும் அவர் கூறியா அவர் இதன் காரணமாக இரு நாடுகளுக்குள்ளேயும் புதிய வேலைவாய்ப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் ஜோன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.