May 29

ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லா இருக்கும்... சொல்கிறார் சதுரங்கவேட்டை நட்ராஜ்...!

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து அவர்தான் முடிவு செய்யவேண்டும் என நடிகர் நட்ராஜ் தெரிவித்துள்ளார். ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லா இருக்கும் என்றும் நடிகர் நட்ராஜ் கூறியுள்ளார்.

சினிமா துறையில் இருந்து பல பிரபலங்கள் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சதுரங்கவேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் நட்ராஜ், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, 'இவரு இதுக்கு தான் லாயக்கு என்று சொல்ல முடியாது. வராரு வரவில்லை என்பது அவரது தனிப்பட்ட விஷயம்.அவர் தான் முடிவு செய்ய வேண்டும். வந்தால் நல்லா இருக்கும் என்பது எங்க எல்லோருடைய நம்பிக்கை. அப்படி நம்பக் கூடியவர்களில் நானும் ஒருவன்' இவ்வாறு நட்ராஜ் தெரிவித்துள்ளார்.