Jun 23

ஐரோப்பாவிலேயே சுவிஸில் தான் உணவுப் பொருட்கள் விலை அதிகம்!!

2017 இற்கான Eurostat தரவு தகவல் அறிக்கையின் படி, ஐரோப்பாவில் விலை அதிகம் நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து 2ம் இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒப்பீட்டளவில் ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட 59 மடங்கு நுகர்வோர் பொருட்களின் விலை அதிகம் என தெரியவந்துள்ளது.

மேலும் உணவு பண்டங்களுக்கான விலையும் போதையற்ற குடி பானங்களுக்கான விலையுமே  மிக அதிகம் என ஆய்வுகள் வெளியாகின.

தொடர்ந்து 3 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து தான் உணவு மற்றும் பானங்களின் அதி உயர் விலையை கொண்ட நாடாக திகழ்ந்து வருகிறது. அவ்வாறு ஒப்பிடும் போது ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட சுவிஸ் 68 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.