Jun 23

வடகிழக்கில் படையினரின் எண்ணிக்கையை குறைக்கவில்லை- இராணுவதலைமை

வடக்குகிழக்கில் உள்ள படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படுகின்றது என வெளியான தகவல்களை இலங்கை இராணுவதலைமையகம் நிராகரித்துள்ளது.

அதிருப்தியடைந்துள்ள சில அரசியல் சக்திகள் தொடர்ச்சியாக தெரிவித்து வரும் தகவல்கள் காரணமாக உருவான வதந்தியே இது என இலங்கை இராணுவதலைமையகம் தெரிவித்துள்ளது.

இராணுவம் வடக்கிழக்கில் உள்ள படையினரின் எண்ணிக்கையை குறைக்கின்றது இதன் மூலம் தேசத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்ற தகவல்களை பொதுமக்களை பிழையாக வழிநடத்தும்நோக்குடன் இந்த அரசியல் சக்திகள் வெளியிட்டுவருகின்றன எனவும் இராணுவதலைமையகம் தெரிவித்துள்ளது.

படையினரை விட தாங்கள்தேசப்பக்தி மிகுந்தவர்கள் என காண்பிப்பதற்கு இந்த சக்திகள் முயல்கின்றன எனவும் இராணுவதலைமையகம் தெரிவித்துள்ளது.