Mar 13

சீனாவுக்கு எதிராக வியட்நாம் போர்க்கொடி

தென்சீனக் கடற்பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய பாராசெல் தீவுக்கு சீனா பயணிகள் கப்பலொன்றை இயக்கியது. சுமார் 300 பயணிகள் வரை இந்தக் கப்பலில் பயணம் செய்துள்ளனர். 

சீனாவின் இச்செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள வியட்நாம் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லீ ஹாய் பிஃன், 

'சீனாவின் இந்த செயல் வியட்நாம் நாட்டின் இறையாண்மையை மீறும் வண்ணம் உள்ளது. சர்வதேச விதிகளின் படி சீனா இத்தகைய செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

தென் சீனக் கடல் பகுதியின் பெரும் பகுதியை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அங்கு செயற்கைத் தீவுகளை அமைத்து கடற்படை தளங்களை நிறுவி வருகின்றது. 

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அண்டை நாடுகளான வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.