Jun 23

கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியாலாளர் வீட்டில் கொள்ளை!

கிளிநொச்சி முரசுமோட்டையில் 2ம் கட்டை பகுதியில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் வீட்டில் நேற்று இரவு மயக்கமருந்து பயன்படுத்தி இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகை, பணம் என்பன களவெடுக்கப்பட்டுள்ளது.

இது பற்றி மேலும், கிளிநொச்சி முரசுமோட்டை 2ம் கட்டைப் பகுதியில் வசிக்கும் சுயாதீன ஊடகவியலாளரான ச.விமல்ராஜ் என்பவரது வீட்டில் (21.06.2018) அவர்கள் தூக்கத்தில் இருக்கும் வேளை இரவு 12 மணிக்குப்பின்னர் அவர்களை மயக்கமடையக்கூடிய மயக்கமருந்து பயன்படுத்தி வீட்டினுள் புகுந்த திருடர்கள் வீட்டு அலுமாரிப் பூட்டை உடைத்து அதற்குள் இருந்த உடுப்புப் பெட்டிகள் மற்றும் பணம் நகை என்பன வைக்கும் பெட்டி என்பவற்றை வீட்டின் பின்புறம் துக்கிச் சென்று அதன் பூட்டினை உடைத்து அதற்குள்ளிருந்த 3 பவுண் தங்க நகைகள், 78000 ரூபா பணம் போன்ற பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. 

இக்களவுச் சம்பவம் பற்றி கிளிநொச்சி பொலிஸாரிடம் முறையிடப்பட்டதையடுத்து தடயவியல் குற்றத்தடுப்புப் பொலிஸார் வீட்டிற்குச் சென்று விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.