Jun 22

முத்திரை வெளியிடப்பட்டு போப்பின் வருகை கௌரவிக்கப்பட்டது

சுவிட்சர்லாந்தில் போப்பின் வருகையை கொண்டாடும் வகையில் ஒரு சிறப்பு முத்திரையை  ‘சுவிஸ் தபால்’ வெளியிடப்பட்டது.

போப் பிரான்சிஸ் வியாழக்கிழமை ஜெனீவாவில் அரிய ஒரு நாள் விஜயம் சென்றார்.

14 ஆண்டுகளின் பின்  முதல் முறையாக ஒரு போப் சுவிஸ் மண்ணில் கால் வைக்கிறார்.

இந்த சந்திப்பை குறிக்க, சிறப்பு பதிப்பு முத்திரை வியாழன் அன்று சுவிச்சர்லாந்தின் அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் கிடைக்கப்பெற்றன.

ஜெனிவாவில் பிரபலமான Jet d’eau நீரூற்றுக்கு முன்னால் கத்தோலிக்க திருச்சபைத் தலைவரான போப் பிரான்சிஸ் முகத்தை இந்த சிறப்பு பதிப்பு முத்திரை காட்டுகிறது.