Jun 22

யாழில் தபால் சேவை ஊழியர்கள் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம்

தபால்தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் தொடர் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தைவிரிவுபடுத்தி, தபால் சேவை ஊழியர்கள் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தையாழ்ப்பாணத்தில் முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம்பிரதம தபாலகத்துக்கு முன்பாக கூடாரம் அமைத்து ஊழியர்கள் அனைவரும் இன்று காலை முதல்அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

6 கீழ் 2006சுற்றறிக்கையில் உள்ளவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த வலுயுறுத்தி தபால் திணைக்களஒன்றிணைந்த தொழிற்சங்கம் கடந்த 12ஆம் திகதி முதல் தொடர்ந்து 11ஆவது நாளாகபணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

நாடுமுழுவதுமுள்ள24 ஆயிரம் தபால் ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதனால் கடந்த 12ஆம் திகதி முதல் தபால்கள்ஏற்றுக்கொள்ளல் மற்றும் விநியோகத்தல் பணிகள் முடங்கியுள்ளன.

தொழிற்சங்கநடவடிக்கை காரணமாக மத்திய தபால் பரிவர்த்தனை நிலையம், 654 தபால் நிலையங்கள்மற்றும் 3 ஆயிரத்து 410 உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.