Jun 22

கார்மின் ஃபோர் ரன்னர் 645 மியூசிக் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்

கார்மின் நிறுவனம் தனது ஃபோர் ரன்னர் 645 மியூசிக் ஸ்மார்ட்வாட்ச்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் ஆஃப்லைன் மியூசிக் ஸ்டோர் செய்யும் வசதி கொண்ட கார்மின் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் ஆக அறிமுகம் செய்யப்பட்டது. அதிகபட்சம் 500 பாடல்களை ஸ்டோர் செய்து கொள்ளலாம் என்H வகையில், பாடல்களை ப்ளூடூத் ஹெட்செட் மூலம் கேட்க முடியும்.

இதனால் ஸ்மார்ட்போன் உதவியின்றி ப்ளூடூத் ஹெட்செட் மூலம் பாடல்களை கேட்க முடியும். உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது ஸ்மார்ட்போன் எடுத்து செல்ல முடியாத இடங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

கார்மின் ஃபோர் ரன்னர் 646 மியூசிக் ஸ்மார்ட்வாட்ச்-இல் 24/7 இதய துடிப்பை கண்காணிக்கும் வசதி, ஓட்ட பயிற்சி சார்ந்த விவரங்களை மிக துல்லியமாக வழங்குகிறது. இதே போன்று பல்வேறு உடல் அசைவுகளை மிக நுனுக்கமாக டிராக் செய்கிறது. மெட்டல் பெசல்கள், அதிக உறுதியான கிளாஸ், பேன்ட்களை மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் உடற்பயிற்சியை கண்காணித்து, தானாகவே மதிப்பீடு செய்யும். இந்த தகவல்களை கொண்டு உடற்பயிற்சியை சிறப்பாக செய்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியும்.கார்மின் ஃபோர் ரன்னர் 645 மியூசிக் அம்சங்கள்:

- 1.2 இன்ச் 240x240 பிக்சல் சன்லைட்-விசிபில், டிரான்ஸ்ஃப்ளெக்டிவ் மெமரி இன் பிக்சல்

- ப்ளூடூத் ஸ்மார்ட் மற்றும் ANT+

- ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் சப்போர்ட்

- 500 பாடல்களை சேமிக்கும் வசதி

- ப்ளூடூத் ஹெட்போன் சப்போர்ட்

- ஆஃப்லைன் ஸ்ட்ரீமிங் வசதி

- மேம்படுத்தப்பட்ட ஃபிட்னஸ் அம்சங்கள்

- ரிஸ்ட்-சார்ந்த இதய துடிப்பு சென்சார்

- 5 ATM வாட்டர் ரெசிஸ்டன்ட்

- ஸ்மார்ட்வாட்ச் மோடில் 7 நாள் பேக்கப்

- ஜிபிஎஸ் மோட் மற்றும் மியூசிக் வசதியுடன் 5 மணி நேர பேக்கப்

கார்மின் ஃபோர் ரன்னர் 645 மியூசிக் ஸ்மார்ட்வாட்ச் பிளாக் அல்லது செர்ஸி பேன்ட் விலை ரூ.39,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அமேசான், கார்மின் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் பேடிஎம் மால் வலைத்தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.