Jun 22

மாடுகள் கொலைத் தடைச் சட்டம்

இலங்கை, களுத்துறை மாவட்டம், மத்துகமம் பிரதேச சபை.

யூன் 5, 2018 மத்துகமம் பிரதேசசபையார் இயற்றிய தீர்மானம் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்தது.

மத்துகமம் பிரதேச சபை எல்லைக்குள் எவரும் எக்காரணம் கொண்டும் மாடுகளைக் கொல்லக் கூடாது. இதுவே தீர்மானத்தின் சாரம்.

34 உறுப்பினர் கொண்ட சபை. ஒருவர் முசுலிம். மற்ற அனைவரும் புத்தர்.தீர்மானத்துக்கு 27 உறுப்பினர் ஆதரவு. 3 உறுப்பினர் எதிர்ப்பு, 3 உறுப்பினர் சார்பின்மை, ஒருவர் வரவில்லை.

தீர்மானத்தை முன் மொழிந்தவர் வண. நாறவில் சமதவன்சர். அவர் ஆமதுறு. கரம்பத்தாரைப் புத்த பன்சாலைக் குரு. பிரதேச சபை உறுப்பினர்.

பல்லாண்டுகளாக முயன்றேன். இப்பொழுதுதான் முடிந்தது. மனத்துக்கு மிக்க ஆறுதல் என்கிறார் புத்த குருவானவர்.

பிரதேச சபைத் தலைவர் மெரில் முனசிங்கரைப் (+94 771303676) பாராட்டி ஆடை போர்த்தினேன். பிரதேச சபைச் செயலரைப் பாராட்டினேன். மேனாள் அமைச்சர் இல்லம் சென்று அவரையும் பாராட்டினேன். வண. நாறவில் சமதவன்சரின் (+94713924775) பன்சலைக்குச் சென்று பாராட்டினேன்.

அனைவரையும் வடக்குக்கு வருமாறும் மாட்டுக் கொலைத் தடையை ஊக்குவிக்குமாறும் அழைத்தேன். ஆர்வலர் அவர்களை அழைத்துப் பாராட்டுவீர்களாக.