Jun 22

என்னைக் கொன்று கொட்டமடிக்கும் மானிடா...

என்னைக் கொன்று

கொட்டமடிக்கும் மானிடா...

என் இடத்தை நீ அழித்து ஆக்கிரமித்து

என் இனத்தை நீ துரத்தி துடிதுடிக்க வைத்து

என்னை நீ ஏதிலி ஆக்கிவிட்டதால்தான்

நான் திக்குத் தடுமாறி

உன் இடத்தில் புகுந்து கொண்டேன்

போக வழி தெரியாது

போய்க் கொண்டிருந்த என்னை

புலி என்றாய் புடி என்றாய்

கிலி கொண்டு பசியோடு ஓடிய என்னை

சும்மா விட்டாயா?

ஆனாலும் நான் நரி அல்ல 

புலி என்றேன்!

என் உயிர் பறித்து 

என் வெற்றுடல் மீது 

உன் வெற்றி வீரம்...

என் செய்வேன்...

அதே பாதங்கள்தான்

இதே இடத்திலும்........


-சிவேந்தன்-