Mar 13

தி.மு.க.வின் போராட்டம் தேவையற்றது தழிழக முதல்வர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணிமங்கலத்தில் கருத்து வெளியிடுகையில், 

குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிமராமத்து பணிக்காக தேவையை பொறுத்து கூடுதல் நிதி ஒதுக்கப்படும். 

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றது. ரேஷன் கடைகளில் பொருட்கள் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றது. 

அனைத்து பொருட்களும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 20 ஆயிரம் தொன் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. ரேசன் கடைகள் முன்பு தி.மு.க. போராட்டம் நடத்துவது தேவையற்றது என்றார்.