Jun 21

மாவை எம்.பியை சந்தித்தார் நாவிதன்வெளி பிரதேசசபைத் தவிசாளர்

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவைசேனாதி ராஜாவுக்கும் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளரான தவராசா கலையரசனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று காலை கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது நாவிதன்வெளி பிரதேசத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை தொடர்பில் தவராசா கலையரசன் மாவை சேனாதிராஜாவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.