Jun 21

இணையத்தில் லீக் ஆன நோக்கியா X6 குளோபல் வேரியன்ட்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா X6 ஸ்மார்ட்போனினை முதற்கட்டமாக சீனாவில் வெளியிட்டது. சீனாவில் CNY 1,299 (இந்திய மதிப்பில் ரூ.13,800) என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட நோக்கியா X6 சர்வதேச சந்தையில் வெளியாவது குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தது.

இந்நிலையில், நோக்கியா சர்வதேச வலைத்தளத்தில் நோக்கியா X6 ஸ்மார்ட்போன் ஷாப் நௌ (Shop Now) பட்டனுடன் இடம்பெற்றிருக்கிறது. எனினும் விரைவில் இந்த ஸ்மார்ட்போன் வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டு விட்டது. 

விளம்பரம் வலைதளத்தில் இருந்து எடுக்கப்படும் முன் நோக்கியா லேட்டஸ்ட் எனும் வலைத்தளம் அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்திருக்கிறது.

முன்னதாக பல்வேறு தளங்களில் நோக்கியா X6 குறித்த தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்சமயம் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் காணப்பட்டிருப்பது ஸ்மார்ட்போனின் வெளியீடு விரைவில் நடைபெற இருப்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கிறது.

நோக்கியா X6 ஸ்மார்ட்போனில் நாட்ச் ரக டிஸ்ப்ளே, செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் பிரைமரி கேமரா , கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

இதன் 4 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி மாடல் விலை CNY 1,299 (இந்திய மதிப்பில் ரூ.14,800), 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் விலை CNY 1,499 (இந்திய மதிப்பில் ரூ.16,000), 6 ஜிபி ரேம், 64 ஜிபி வேரியன்ட் விலை CNY 1,699 (இந்திய மதிப்பில் ரூ.18,100) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.