Jun 21

கிளிநொச்சியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல்

இன்று அதிகாலை 12.30 அளவில் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சிலவற்றின் மீது இனந்தெரியாத நபர்களால் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய கல்லூரியின் மைதானம் திசையிலிருந்து பதுங்கியிருந்த சில குழுவினரால் இந்த கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் மேலும் கூறினர்.

இந்த கல்வீச்சுத் தாக்குதலில் இரண்டு கார்கள், இரண்டு வான்கள், ஒரு லொறி மற்றும் ரிப்பர் ஒன்று சேதமடைந்திருப்பதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை கடந்த 6 மாதங்களுக்கு முன்னரும் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சில வாகனங்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.