Jun 21

பிரான்ஸில், இவ்வருட விடுமுறைக்கு ஆப்பு!

ரயில்வே தொழிலாளர் சங்கம் CGT Chaminots தமது வேலைநிறுத்தங்கள் கோடைகாலத்திலும் தொடரும் என அறிவித்துள்ளது. அத்துடன் கடந்த மூன்று மாதங்களில் சேவையில் ஈடுபட்ட ரயில்களை விட குறைவான ரயில்களே சேவையில் ஈடுபடும் எனவும் அறிவித்துள்ளது. 

வேலைநிறுத்தங்கள் ஜூலை மாதமும் தொடரும் என்று கடந்த வாரம் தெரிவித்த பின்னர், இன்று CGT Cheminots இன் பொது செயலாளர் Laurent Brun, இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

வேலைநிறுத்தங்கள் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நடைபெறும், ஆனால் வேலைநிறுத்தம் இடம்பெறும் நாட்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. SUD தொழிற்சங்கம் கூட இந்த வேலைநிறுத்தங்களில் இணைய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இவ் வேலைநிறுத்தங்கள் மக்களுடைய விடுமுறை நாட்களை குறிவைத்து மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.