Jun 21

பீல் மற்றும் ஹால்டன் எல்லையில் தாக்குதல் – 3 பேர் காயம்

பீல் மற்றும் ஹால்டன் பகுதிகளின் எல்லைக்கு அருகில் நடந்த தாக்குதல் சமபவத்தில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில் ஒருவரின் நிலை கவலைகளிடமாக இருப்பதாகவும் ஹால்டன் பிரதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவமானது (புதன்கிழமை) நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன் போது ஆண் ஒருவர தலையில் பலத்த காயமடைந்த நிலையில், அருகில் இருக்கும் வைத்தியசலையில் அனுமதித்துள்ளதாகவும், மேலும் சிறு காயமடைந்த மேலும் 2 போரையும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் குறித்த சம்பவத்திற்கான காரணங்கள் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.