May 28

கொரிய தளத்தில் தவறுதலாக கசிந்த சாம்சங் கேலக்ஸி ஜெ5 (2017), ஜெ7 (2017)

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ5 (2017), மற்றும் ஜெ7 (2017) ஸ்மார்ட்போன்கள் சாம்சங் பிரத்தியேக கிட் மோட் செயலியில் காணப்பட்டது. இதையடுத்து 2017 ஜெ5 மற்றும் ஜெ7 ஸ்மார்ட்போன்கள் வெளியாகவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ5 (2017), ஜெ7 (2017) ஸ்மார்ட்போன்கள் அந்நிறுவனத்தின் பிரத்தியேக கிட் மோட் செயலியில் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய கேலக்ஸி ஜெ5 (2017), ஜெ7 (2017) ஸ்மார்ட்போன்கள் வெளியாவதை புதிய தகவல்கள் உறுதி செய்துள்ளன. புதிய ஸ்மார்ட்போன்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை சாம் மொபைல் எனும் தளம் வெளியிட்டுள்ளது. 

சாம்சங் கேலக்ஸி ஜெ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அந்நிறுவனத்தின் பட்ஜெட் ரகத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் புதிய கேலக்ஸி ஜெ7 (2017) ஸ்மார்ட்போனின் வீடியோவும் இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் வெளியாகியுள்ள வீடியோவில் புதிய ஸ்மார்ட்போனில் வித்தியாசமாக பொருத்தப்பட்டுள்ள ஆன்டெனாக்கள், ஒற்றை பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் ஹோம் பட்டன் உள்ளிட்டவை காணப்படுகிறது.

இத்துடன் யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.9 அப்ரேச்சர், 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 1.6 ஜிகாஹெர்ட்ஸ் எக்சைனோஸ் 7870 பிராசஸர், 3ஜிபி ரேம் மற்றும் 3600 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும், 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

முன்னதாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஜெ7 பிரைம், ஜெ5 பிரைம் ஸ்மார்ட்போன்களின் 32ஜிபி மாடலினை இந்தியாவில் வெளியிட்டது. சாம்சங் கடந்த ஆண்டு வெளியிட்ட கேலக்ஸி ஜெ5 பிரைம் மற்றும் ஜெ7 பிரைம் ஸ்மார்ட்போன்களின் 32 ஜிபி மாடல்களின் விலை இந்தியாவில் முறையே ரூ.14,900 மற்றும் ரூ.16,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.