Jun 20

யானை தாக்குதலுக்கு இலக்கான தேரர் வைத்தியாலையில்

அநுராதபுரம் – மதவாச்சி – வேவெல்கெட்டிய பிரதேசத்தில், காட்டு யானை தாக்குதலுக்கு தேரர் ஒருவர் இலக்காகியுள்ளார்;.

இன்று அதிகாலை இந்த காட்டு யானை தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து பயணித்த குறித்த தேரர், வேவெல்கெட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரைக்கு சென்ற நிலையில், இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த தேரர், அநுராதபுரம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார.

இதேவேளை, பதுளை, கிரான்துருகோட்டே – விரானகமவில காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வனஜீவராசிகள் திணைக்கள பாதுகாப்பு அதிகாரியொருவரே இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.