May 28

ரஜினி வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவார்: பார்த்திபன் நம்பிக்கை

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் வரை காத்திருப்போம் என்று நடிகர் பார்த்திபன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய நடிகர் பார்த்திபன் இன்று வந்திருந்தார். இப்போது செய்தியாளர்களைச் சந்தித்த போது பேசிய அவரிடம் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், "ரஜினி ஆண்டவன் உத்தரவிட்டால் அரசியலுக்கு வருவேன் என்கிறார். அவருக்கு உத்தரவு போடும் ஆண்டவனுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. அதனால், அவர் அரசியலுக்கு வருவது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது." என்றார்.“ரஜினி ஆண்டவனிடம் தொடர்பு வைத்துள்ளார். ஆண்டவனுடன் எனக்கு நேரடி தொடர்பு இருந்தால், நானே இது பற்றி அவரிடம் கேட்டுவிடுவேன். அவர் ஆண்டவனிடம் பேசி முடிவு செல்லும் வரை பொறுமையாக காத்திருப்போம்.” என்றும் அவர் கூறினார்.