Jun 18

ஆத்ம சாந்தி வழிபாடும் மதிய போசன நிகழ்வும்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மூத்த போராளியானயாழ்ப்பாணம் சிறாம்பியடியைச் சேர்ந்த பொன்னுத்துரை குணராஜா (டெனா)அவர்களை 16.06.1986 அன்று மருதனார் மடம் சந்தியில் வைத்துதுப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வின் முப்பத்திரெண்டாம்ஆண்டு நினைவு தின நிகழ்வும் ஆத்ம சாந்தி பூஜையும் வழிபாடும் அதனைத்தொடர்ந்து மதிய போசன நிகழ்வும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் என்.விந்தன் கனகரட்ணத்தின் ஏற்பாட்டில் 16.06.2018 அன்று ஊரெழு ஒக்சிலியம்இல்லத்தில் இல்ல அதிபர் அருட்சகோதரி அகத்தா தலைமையில்நடைபெற்றது.

காலையில் அமரர் பொன்னுத்துரை குணராஜா (டெனா) அவர்களின் ஆன்மசாந்திக்காக ஒக்சிலியம் இல்லத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதைத்தொடர்ந்து, வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம்அவர்களால் இல்லத்தில் வசிக்கும் பெற்றோர்களை இழந்த மற்றும்பெற்றோர்களால் கைவிடப்பட்ட 50 க்கும் மேற்பட்ட ஒக்சிலியம் இல்லசிறார்களுக்கு மதியபோசனம் வழங்கப்பட்டது. இல்ல சிறார்களுடன்இணைந்து வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம்,பொன்னுத்துரை குணராஜா (டெனா) அவர்களின் சகோதரி, உறவினர்கள்மற்றும் ரெலோவின் சர்வதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் திரு. நித்திஆகியோரும் மதிய பிரார்த்தனையிலும், மதியபோனச நிகழ்விலும்கலந்துகொண்டனர்.