Jun 18

உலக கோப்பை கால்பந்து: பிரேசில் - சுவிஸ் போட்டி டிரா

உலக கோப்பை கால்பந்து போட்டியில், பிரேசில், சுவிட்சர்லாந்து மோதிய லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது.

ரஷ்யாவில் 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் லீக் ஆட்டம் ஒன்றில் பிரேசில் - சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. பிரேசில் வீரர் பிலிப் கோடின்கோ 20 நிமிடத்தில் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார்.

முதல் பாதியில் பிரேசில் 1 - 0 என முன்னிலை பெற்றது. 50வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ஸ்டீவன் ஜூபர் கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என சமநிலை ஆனது. தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சி கைகூடாமல் போக, ஆட்டம் டிராவில் முடிந்தது.