Jun 16

குமார் சங்கக்காரவும் நிரகரிப்பு

இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகர்களாக இணைந்து கொள்ளுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கையை இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரவும் நிராகரித்துள்ளார்.

முன்னதாக, இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான முத்தையா முரளிதரன், மஹேல ஜயவர்தன மற்றும் ரொஷான் மஹானாம ஆகியோர் நிராகரித்திருந்தனர்.ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் ஆலோசகர்களாக இணையுமாறு இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, முத்தையா முரளிதரன், ரொஷான் மஹானாம மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோரிடம் விளையாட்டுத் துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், அதில் மூன்று வீரர்கள் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.