Jun 15

அசத்தல் அம்சங்களுடன் ஜெப்ரானிக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்

ஸ்மார்ட் சாதனங்களின் புரட்சி உங்களது வாழ்க்கை முறையை தொடர்ந்து மாற்றியமைத்து வருகிறது. 

நமது அன்றாட வாழ்வில் நமக்கு தேவையான பல்வேறு அவசர தகவல்களில் துவங்கி, பொழுதுபோக்கு என எல்லாவற்றுக்கும் தீர்வு வழங்கும் அசாத்திய பணிகளை நமது கையடக்க சாதனங்கள் மிக சுலபமாக செய்து முடிக்கின்றன. வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் ஸ்மார்ட்போன் செய்யும் பணிகளில் பாதியை ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஃபிட்னஸ் டிராக்கர் போன்ற சாதனங்கள் பறித்துக் கொள்கின்றன.

இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், சவுண்ட் சிஸ்டம்கள், மொபைல் மற்றும் இதர மின்சாதனங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக ஜெப்ரானிக்ஸ் இருக்கிறது. இந்நிறுவனம் கையில் அணியக்கூடிய பொருட்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் 'ஸ்மார்ட் டைம் 200' என்று அழைக்கப்படும் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.ஸ்மார்ட்போனினை ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்துடன் இணைந்து கொள்ள முடியும். இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தில் இன்பில்ட் ஸ்பீக்கர் மற்றும் மைக் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளை க்ளிக் செய்து வாட்ச் மூலம் பேசலாம். இதன் இன்பில்ட் ஸ்பீக்கர் பயனருக்கு வசதியாக இருக்கும் படி தேவையான அளவு ஒலியெழுப்புகிறது. 

அழைப்புகள் சார்ந்த விவரம் மட்டுமின்றி எஸ்எம்எஸ், மின்னஞ்சல் மற்றும் பல்வேறு சேவைகளுக்கான நோட்டிஃபிகேஷன்களையும் இந்த ஸ்மார்ட்வாட்ச் வழங்குகிறது. இதில் வழங்கப்பட்டு இருக்கும் பீடோமீட்டர் அம்சம் நீங்கள் எத்தனை தூரம் நடந்திருக்கிறீர்கள் என்ற விவரத்தை வழங்கும். இத்துடன் உங்களது உறக்கம் சார்ந்த விவரங்களையும் டிராக் செய்து வழங்குகிறது.  ஸ்மார்ட் டைம் 200 சிறப்பம்சங்கள்:

- 2.71 செ.மீ டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே

- நானோ சிம் ஸ்லாட் வசதி

- மைக்ரோ SD கார்டு ஸ்லாட்

- BT வயர்லெஸ் வசதி

-தொடு திரை வசதி

- இன்-பில்ட் ஸ்பீக்கர் & மைக் கொண்டது

- பீடோமீட்டர் மற்றும் ஸ்லீப் மானிட்டர்

- முன்பக்க கேமரா

ஸ்மார்ட் டைம் 200 சாதனத்தில் மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்க மைக்ரோ SD கார்டு வசதி வழங்கப்பட்டுள்ளது. 380 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஸ்மார்ட் டைம் 200 வட்டவடிவத்தில் 2.71 சென்டிமீட்டர் அளவில் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. 

இத்துடன் மைக்ரோ சிம் / நானோ சிம் ஸ்லாட் வழங்கப்பட்டிருப்பதால் இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை ஒரு முழுமையான தனி சாதனமாகவும் பயன்படுத்த முடியும். இன்-பில்ட் ஸ்பீக்கர், முன்பக்க கேமரா, சவுண்ட் ரெகார்டர், பிரவுசர், ஃபைல் மேனேஜர் மற்றும் பல்வேறு அம்சங்களுடன் தொடுதிரை வசதி கொண்டிருக்கும் ஸ்மார்ட் டைம் 200 உங்களின் பொழுதுபோக்குக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் இருக்கிறது.

இந்தியாவில் ஜெப்ரானிக்ஸ் ஸ்மார்ட் டைம் 200 விலை ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செவ்வகம் மற்றும் வட்ட வடிவம் கொண்ட ஸ்மார்ட் டைம் 200 சாதனத்தை இந்தியாவின் முன்னணி ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது.