Mar 13

பங்களா. சகலதுறை வீரர் மெஹ்முதுல்லா நீக்கம்

இலங்கை - பங்காளதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் 2ஆவது டெஸ்ட் 15ஆம் திகதி  கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அந்த அணியின் சகலதுறை வீரர்  மெஹ்முதுல்லா டெஸ்டில் நீக்கப்பட்டுள்ளார்.

காலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் மெஹ்முதுல்லா முதலின்னிங்ஸில் 8ஓட்டங்களையும் 2ஆவது இன்னிங்ஸில் ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்தார்.

அதேநேரம் இந்தியாவிற்கு எதிரான டெஸ்டில் அரை சதம் மட்டுமே அடித்துள்ள அவர் அதற்கு முன்னதான  10 இன்னிங்ஸில் பிரகாசிக்கத்தவறியிருந்தார்.

இத்தகைய நிலையில் அவர் நீக்கப்பட்டுள்ளதோடு அவர் கொழும்பில் இருப்பாரா அல்லது தாய்நாடு திரும்புவாரா? என்பது அவரது தனிப்பட்ட முடிவு என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் ஹசன் குறிப்பிட்டார்.  

அதேநேரம் இந்த டெஸ்ட் போட்டி பங்களாதேஷ் அணிக்கு 100ஆவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.