Jun 14

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில் அனுபவிக்கும் வகையில் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தால் இந்த தண்டனையும், 3,000 ரூபாய் தண்டப்பணமும் இன்று விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் சந்தியா எக்னெலிகொடவுக்கு 50,000 ரூபாய் நஷ்டஈடு செலுத்துமாறும் ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2016 ஜனவரி 25ம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் வைத்து திட்டி அச்சுறுத்தியமை தொடர்பில் பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த வழக்கின் தீர்ப்பிற்கு இன்று திகதி குறிக்கப்பட்டிருந்த நிலையில், ஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில் அனுபவிக்கும் வகையில் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.