Jun 14

ரூ.5.68 லட்சத்தில் ’டாடா டிகோர்’ - பட்ஜெட் விலையில் ஒரு லிமிடெட் எடிசன்!

டிகோர் மாடலின் ஓராண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில், புதிய மாடல் ஒன்றை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. 

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ’டிகோர் பஷ்’ மாடலில் ரூ.5.68 லட்சம் மதிப்பிலான பெட்ரோல் காரையும், ரூ.6.57 லட்சம் மதிப்பிலான டீசல் காரையும் அறிமுகம் செய்துள்ளது. ஓராண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் வெளிவந்துள்ள ’டாடா டிகோர் பஷ்’, XT டிரிம்மை அடிப்படையாகக் கொண்டது. இதில் 5-ஸ்பீட் மானுவல் டிரான்ஸ்மிஷன் வசதியுடன் காணப்படுகிறது. 

மிகக் குறைந்த அளவில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ள ’டிகோர்’ மாடலில், உட்புற மற்றும் வெளிப்புற அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது, க்ளோசி கருப்பு நிற மேற்கூரை, பியானோ கருப்பு நிற பின்புற கண்ணாடிகள், டுவல் டோன் சக்கர மேற்பகுதி, முன்பகுதி கிரில்லே, லிமிடெட் எடிசன் பேட்ஜ், பெர்ரி சிவப்பு ரிங்ஸ், ஏசி வெண்ட்ஸ், முழுவதும் ஃபேபரிக் வகையிலான இருக்கைகள் ஆகியவை அடங்கும்.

ஸ்டாண்டர்டு XT மாடலை விட, ’டாடா டிகோ பஷ்’ கார் ரூ.12,000 கூடுதல் விலை கொண்டது.

இன்று முதல் இந்தியாவின் அனைத்து டீலர் ஷிப் கடைகளிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், ‘டாடா டிகோர்’ மாடல் கார் இம்பாக்ட் டிசைனைக் கொண்டது. இது 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன், மல்டி டிரைவ் மோட்களைப் பெற்றது

பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை டுவல் ஏர்பேக்ஸ், ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் பிரேக்போர்ஸ் டிஸ்டிர்பூசன், கார்னர் ஸ்டபிலிடி கண்ட்ரோல், பின்புற பார்க்கிங்கிற்கு ஏற்ற கேமரா கொண்டது. ‘டிகோர்’ மாடல் கார் இளைஞர்களுக்கு ரசனைக்கு ஏற்ப டிசைன், ஸ்டைல், ஈர்ப்பு கொண்டுள்ளது. 

இந்திய கார் சந்தையில் மாருதி சுசுகி டிசையர், ஹூண்டாய் எக்ஸ் செண்ட், ஃபோர்டு அஸ்பயர், ஹோண்டா அமேஸ், வோக்ஸ்வேகன் அமியோ ஆகிய மாடல்களுக்கு போட்டியாக ’டாடா டிகோர்’ அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.