Jun 14

பிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..!

கடந்தாண்டு பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ்” நிகழ்ச்சிக்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மக்கள் அதன் இரண்டாம் பாகத்தை உடனடியாக எதிர்பார்த்தனர்.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின் எதிர்வரும் ஞாயிறு முதல் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. முதல் பாகத்தை தொகுத்து வழங்கிய கமலே, இதனையும் தொகுத்து வழங்குகிறது.

இதற்கான புரோமோக்கள் கடந்த மாத ஆரம்பத்திலேயே வெளிவரத் தொடங்கியது. அந்தவகையில், நான்கைந்து விதமான புரோமோக்கள் தற்போது ஒளிபரப்பப் படுகின்றன. சிலவற்றில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறவர்கள் பற்றி கமல் சில க்ளூக்களைக் கொடுத்தார்.

மேலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 2 வரும் 17 ஆம் திகதி முதல் துவங்கவுள்ளது.

இதில் கலந்து கொள்பவர்கள் பெயர்கள் படு சீக்ரெட்டாக வைத்துள்ளனர். இந்நிலையில், இதில் நடிகை மும்தாஜ் கலந்துகொள்ள இருப்பதாக அவரின் நட்பு வட்டாரங்கள் மூலம் உறுதியளித்துள்ளனர்.